வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் இடைநிறுத்தம்

மேல்மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகமானது ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மோட்டா வாகனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 7 முதல் 16 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் வாகனங்களின் வாகன வருமான உத்தரவு பத்திரங்கள் காலாவதியானால் நவம்பர் 15 ஆம் திகதி வரை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்றும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous articleபுகையிரத பயணிகளுக்கு விஷேட அறிவித்தல்
Next articleமாட்டு இறைச்சி விவகாரம், பற்றி எரியத் தேவை இல்லை