பஸ்களில் பயணிக்க வேண்டுமென்றால் இது முக்கியம்

பஸ்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ்களில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமானதென ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வகையில் செயற்படும் பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

Free Visitor Counters