இலங்கையில் முதன்முறையாக மருத்துவருக்கு கொரோனா

கம்பஹா வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பிரியந்த இலேபெரும இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாளர் என உறுதிப்படுத்தப்பட்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பெண் ஊழியர், இந்த மருத்துவரின் தனியார் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், குறித்த மருத்துவரை தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இலங்கையில் முதன்முறையாக மருத்துவரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து
Next articleமத்திய மாகாணத்தில் மறு அறிவித்தல் வரை தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு ஆளுனர் உத்தரவு.