எகிப்தில் எண்ணெய்க் குழாய் தீப் பிடித்து பாரிய விபத்து

எகிப்தின் பாலைவன நெடுஞ்சாலையொன்றில் சேதமடைந்த கச்சா எண்ணெய் குழாய் எதிர்பாராத விதமாக தீப் பிடித்ததில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 17 பேர் காயமடைந்துள்ளதுடன், வீதியில் பயணித்த பல வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கெய்ரோவிலிருந்து சூயேஸ் கால்வாய் வரையில் அமைந்துள்ள பாலைவன நெடுஞ்சாலை பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தீ விபத்தினால் காயமடைந்த 17 பேர் அருகளில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதுடன், தீப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் தொட்ந்தும் ஈடுபட்டனர்.

சேதமடைந்த குழாய் வழியாக எச்சா எண்ணெய் கசிந்து கொண்டிருக்கையில், போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனமொன்றிலிருந்து வெளியேறிய தீப்பொறி காரணமாக இந்த தீப்பரவல் இடம்பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

எனினும் விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுகின்றது

கடந்த இலையுதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு விபத்தில், திருடர்கள் நைல் டெல்டா மாகாணமான பெஹீராவில் பெற்றோல் அள்ள முயன்றபோது எரிபொருள் கசிந்து தீப்பிடித்ததில் ஏழு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleமுஸ்லிம் பிரதிநிதித்துவமும் அரசியல் சமநிலையும்
Next articleகொரோனா பரிசோதனையில் குழந்தைக்கு நேர்ந்த அவலம்