தேசிய கண் வைத்தியசாலை பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி, அவசர சிகிச்சை, கிளினிக் சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வைத்தியசாலைக்கு வருமாறு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசேடமாக 14 வயதுக்கும் குறைந்த வயதுடைய சிறுவர்களை அநாவசியமாக வைத்தியசாலைக்கு அழைத்து வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வைத்தியசாலை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இவ்வாறு அத்தியாவசிய சிகிச்சைக்காக கண் வைத்தியசாலைக்கு வரும் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவௌியை பேணுதல் ஆகிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என இல்ங்கை தேசிய கண் வைத்தியசாலை குறிப்பிட்டுள்ளது.

Read:  மீண்டும் ரணில் !!