வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல்கள் காரணமாக வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுவத்துவதற்கு அரசு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவில் பொதுமக்கள் தனிமைப்படுத்தப்படுவதால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ஒன்பது பேர் தனிமைப்படுத்தலுக்கு செல்லூமாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price