ஆட்பதிவு திணைக்களத்தின் பொது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நிலைமையையடுத்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைவாக பிரதான அலுவலகமும், மாகாண அலுவலகங்களும் நாளை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

இருப்பினும் உயர்தரப் பரீட்சை உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை பெறவிரும்புவோர் பிரதேச செயலகங்களில் உள்ள ஆட்பதிவுத் திணைக்கள பிரிவுகளில் அல்லது பிரதான அலுவகங்களுடன் தொடர்புகொண்டு விசாரிக்க முடியும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0115 226 150 அல்லது 0115 226 115 தொலைபேசி இலக்கங்கள் ஊடக தொடர்புகொண்டு இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page