ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்டமைக்கான சாட்சிகள் இல்லாமையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி ரியாஜ் பதியுதினின் விடுதலை தொடர்பில் வினவிய போதே சமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுவிக்கப்பட்டதன் மூலம் நிரபராதி என கருத முடியாது எனவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ரியாஜ் பதியுதின் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு புத்தளம் பகுதியில் வைத்து கைதான ரியாஜ் பதியுதின் 5 மாத கால விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Previous articleUPDATE : மேலும் 124 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
Next articleஇலங்கையில் ஆபத்து நீடிக்கிறது; கொரோனா பரவல் மூலத்தில் தொடர்ந்தும் மர்மம்!