முஸ்லிம் வர்த்தகருக்குரிய, Brandix இனவாத ரீதியில் இலக்கு வைக்கப்படுகிறதா..?

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடியில் அந்த தொற்றை விட அது எங்கிருந்து வந்தது என்ற செய்திக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை அவதானிக்கும் போது இம்முறையும் கொரோனா முஸ்லிம்களால் பரப்பப்பட்டது என்ற கருத்து சமூக மயப்படுத்த படுகிறதோ என்று தோன்றுகிறது. 

Brandix நிறுவனத்தின் பொறுப்பற்ற தனத்தால்தான்  இந்த வைரஸ் பரவியது என்று அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயத்துக்கு முன்னால்  நின்று இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளை  ஒரு சிங்கள பெண் சத்தமாக திட்டும்  வீடியோ நேற்று இனவாத  ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. 

வீட்டில் தனிமை படுத்ததலில்  இருக்க வேண்டியவர்களை இந்த நிறுவன அதிகாரிகள் வேலைக்கு நிர்பந்தித்து அழைத்ததாக அந்த பெண் குற்றம் சாட்டுவதை வீடியோவில்  கேட்கமுடிகிறது. 

Brandix இலங்கைக்கு வெளியில் மிகவும் அறியப்பட்ட இலங்கை  முஸ்லிம்களால் நடத்தப்படும்.  ஆடை தொழிற்சாலை. இந்த நிறுவனத்தில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை செய்கிறார்கள் ஆண்டுதோறும் பில்லியன் காணக்காண ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிதரும் நிறுவனம் இது. அஷ்ரப் உமர் இதன் நிறைவேற்று பணிப்பாளர். இவர்களின்  குடும்பத்தினரால் சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. 

இறைச்சி வியாபாரத்தை கூட முஸ்லிம்களிடம் இருந்து பிடுங்க வேண்டும் என்று நினைப்போர்  இந்த நிறுவனத்தின் மீது கண் வைத்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதர்க்கு இல்லை. 

இந்த கொரோனா பரவல் அதனால் ஏற்பட்ட செலவுகளுக்கு இந்த நிறுவனத்தை பொறுப்பேற்கும்படியம்  அரசாங்க செலவுக்கு நட்ட ஈடு வழங்கும் படியும் உத்தரவிட்டாலே நாளை  Brandix அதன் இன்றைய உரிமையாளர்களின் கையில் இருக்காது…

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.

இலங்கையர்கள் கொரோனா பற்றி  ஜோக் ஷெயார் செய்து மகிழும் தருணத்தில் இனவாதிகள் இறைச்சிக்கு அடுத்து இன்னொரு கணக்கையும் போடுகிறார்களோ  என்ற சந்தேகம்  எழுவதை தவிர்க்க முடியவில்லை

SOURCE- Farsan -  Jaffna Muslim