ஆட்பதிவு திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் எதிர்வரும் 3 நாட்களுக்கு  நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம்  மற்றும் அலுவலகத்தில் 7 ஆம், 8 ஆம், 9 ஆம் திகதிகிளில் பொது மக்கள் சேவைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார். நாட்டில் தற்போதுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை புதன்கிழமையிலிருந்து  வெள்ளிக்கிழமை (9) வரை ஒரு நாள் சேவைகள் இடம்பெறமாட்டா.

கொழும்பிலுள்ள பிரதான அலுவலகத்திலும் மட்டக்களப்பு, வவுனியா, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாட்டங்களிலுள்ள மாகாண அலுவலகங்களிலும் அலுவலகங்கள் என்பன ஒருநாள் சேவை உள்ளிட்ட ஏனைய பொதுமக்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்றும் அவuர் தெரிவித்துள்ளார்.

Previous articleபுகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
Next articleசாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பு.