மினுவாங்கொடை பெண்ணுக்கு சிகிச்சையளித்த தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த 50 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஐம்பது கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவ தாதி பயணித்த புகையிரதத்தில் பயணம் செய்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட தாதி புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்றார் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

அவர் புகையிரதத்தில் பயணம் செய்த அதேபகுதியில் பயணித்த கடற்படையினரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் பயணம் செய்த ஏனைய பயணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Previous articleஏன் ‘லொக்டவுன்’ செய்யவில்லை… முழு விபரத்தையும் விளக்குகிறார் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா
Next articleஅடுத்த 48 மணித்தியாலங்களும் தீர்மானமிக்கது – நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்