அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள்

அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை மாத்திரம் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி 61,248 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 827 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது வரை மொத்தமாக 3,431,574 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 136,466 ஆக காணப்படுகிறது.

இதேவேளை சர்வதேச ரீதியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13,290,153 ஆகவும், உயிரிழப்புகள் 577,980 ஆகவும் காணப்படுவதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்லைக்கழக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.