புதிய அரசாங்கத்திடம் மக்கள் எதிர்பார்த்தது 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அல்ல எனவும் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்த்ததாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது மக்களின் எதிர்பார்ப்பை விட வேறு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதை காண முடிகிறது எனவும் ஆனந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பலத்தை வழங்கியுள்ள நிலையில், வேறு ஒருவரின் ஆதரவை பெறவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அரசாங்கம் ஆடை அணிந்துக்கொண்டா றிசார்ட் பதியூதீனை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.
இதனை விட அரசாங்கம் அதிகாரத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். மக்கள் எதிர்க்கும் நபர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வது மக்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்படுத்தும் சேதம் எனவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place