இலங்கையில் மேலும் 13 பேருக்கு கொரோனா

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மினுவங்கொட தொழிற்சாலையில் கடமையாற்றி வந்த 13 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்களில் 7 பேர் மினுவங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், 3 பேர் மீரிகம பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜாஎல, மஹர மற்றும் திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் குறித்த 13 பேரிற்குள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் மொத்தமாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் இதுவவரையில் 101 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாதை அடுத்து திவுலுபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read:  இரண்டு கேஸ் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளன.