நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்து எத் தீர்மானமும் இல்லை – அஜித் ரோஹன

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மினுவாங்கொடை, திவுலபிட்டி மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட ‘ தனிமைபப்டுத்தல் ஊரடங்கு ‘ தொடர்ந்தும் அமுல் செய்யப்பட்டுள்ளது. 

இந் நிலையில் இன்று மாலை வரை குறித்த ஊரடங்கு நிலைமையை  மீறிய குற்றச்சாட்டில் 39 பேரைக் கைது செய்ததாக பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதனிடையே, குறித்த மூன்று  பொலிஸ் பிரிவுகளை தவிர ஏனைய இடங்களில் ஊரடங்கு அமுல் செய்யப்படுவது தொடர்பில் வரை எந்த தீர்மாங்களும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,  அனைவரும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கோரினார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter