உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆகக்குறைந்தது ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்து எனக்கு அறிவித்திருந்தால் கூட ஈஸ்டர் தாக்குதலை தடுத்து நிறுத்தி இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்கு மூலம் ஒன்றை வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) ஆஜராகியிருந்தார்.
ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுமார் 7 மணி நேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார் இதன் போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த போது தான் சிங்கப்பூரில் இருந்ததாக கூறியுள்ள அவர் தனது பாதுகாப்பு அதிகாரி மூலமே தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரோ , அல்லது கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபரோ தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்டிருந்த எச்சரிக்கை தொடர்பில் எந்த சந்தர்ப்பத்திலும் அறிவிக்கவில்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place