கம்பஹாவைச் சேர்ந்த 16 கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டக்களப்பில் சுயதனிமைப்படுத்தல்

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக 16 மாணவர்கள் மட்டக்களப்பில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இன்று திங்கட்கிழமை (05) மாலை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நடத்தியுள்ளதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ. லதாகரன்  தெரிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோன தொற்று அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்றுவரும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த 16 மாணவர்கள் நீண்ட விடுமுறையில் சென்று தற்போது திரும்பியுள்ளனர்

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தங்கியிருக்கும் மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள பல்கலைக்கழக விடுதில் அவர்கள் சுயதனிமைப்படுத்தியுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது  எனவே மக்கள் பீதியடைய தேவையில் என அவர் தெரிவித்தார்

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day

SOURCEவீரகேசரி பத்திரிகை
Previous articleகொவிட் – 19 தொற்று – பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
Next articleமகனுக்காக ஏங்கும் தாய்மாரின், கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை – நீதிமன்றத்தில் மகனுடன் தத்தமது அன்பை பரிமாறினர்