இலங்கை எப்போது முஸ்லிம் நாடாக மாறும்: அடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் – கம்மம்பில

இந்த நாடு முஸ்லிம் நாடாக மாறும் தினம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தான் அறிவிக்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வஹாப் வாதத்துக்கு எதிரான நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த நாட்டில் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதத்தை விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களுடன் ஒப்பிட்டு இந்த திகதியை தான் அறிவிக்கவுள்ளதாகவும் கம்மம்பில எம்.பி.  கூறினார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வெளியிடவுள்ள புள்ளிவிபரவியல் தகவல்களில், நாட்டின் முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை  நுாற்றுக்கு 12 வீதமாக உயர்வடையும் எனவும், நாட்டின் பெரும்பான்மையாகவுள்ள சிங்களவர்களின் மொத்த சனத்தொகை 75 வீதத்திலிருந்து 73 வீதமாக மாற்றமடையும் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் குறிப்பிட்டார். 

Read:  பஞ்ச அபாயத்துக்கு வித்திட்ட ரஷ்யா!