அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு கோரிக்கை

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும், கூட்டங்களையும் நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் கொரோனா அதிகரிப்பினை கருத்திற் கொண்டே இந்த கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் 69 ஊழியரகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் வெளியான பி.சி.ஆர். சோதனைகள் முடிவுகளின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் மொத்தக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 3,471 ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleநாடளாவிய ரீதியில் சகல சிறைசாலை கைதிகளையும் பார்வையிட மறு அறிவித்தல் வரை தடை
Next articleபொருட்களைக் கொள்வனவு செய்யவோ, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவோ அவசரப்பட வேண்டாம்.