தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் !!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர  உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகள் குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று இன்று மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleதிவுலப்பிட்டிய ஊழியருடன் நேரடி தொடர்பில் இருந்த 950 பேர் அடையாளம் காணப்படனர்.
Next articleதிவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 1,500 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு