திவுலபிட்டியில் 69 பேருக்கு கொரோனா

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் சேவையாற்றியவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை ஊடாக குறித்த 69 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.