தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பயணிகளுக்கு முன்வைத்துள்ள வேண்டுகோள்

முகக் கவசம் இல்லாது பஸ்களில் பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்ப மாட்டார்கள் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை இருக்கைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதற்கு தனியார் பஸ் இயக்குனர்களுக்கு இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறினார்.

அதேநேரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையினால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

எனவே எனவே பயணிகள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்று விஜேரத்ன குறிப்பிட்டார்.

Read:  இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் - Today Srilanka Gold Price
SOURCEவீரகேசரி பத்திரிகை