இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து இன்றையதினம் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில்  இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய  தொடர்பை பேணிய நால்வர் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2662 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 663 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 120 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 1,988 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
SOURCEவீரகேசரி பத்திரிகை