புகையிரத பயணிகளுக்கு ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கொவிட் -19 வைரஸ்  தொற்று மீண்டும் சமூகமட்டத்தில் பரவலடைந்துள்ள காரணத்தினால்  புகையிரதத்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முன்பு பரிந்துரை செய்த பாதுகாப்பு சுகாதார அம்சங்களை மீண்டும் கட்டாயமாக  கடைப்பிடிக்குமாறு புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் டிலந்த  பெர்னான்டோ தெரிவித்தார்.

அதேநேரம் பொது மக்கள் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஆசன எண்ணிக்கையில்  பயணம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

SOURCEவீரகேசரி பத்திரிகை (இராஜதுரை ஹஷான்)