முஸ்லிம்களை தவறாக பேசுவது, சந்தேக கண்ணோடு பார்ப்பது, வேதனைக்குரியதே

வைத்­தி­ய­சாலை, வியா­பார நட­வ­டிக்கை மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கு செல்லும் முஸ்­லிம்கள் குறித்து தவ­றாக பேசு­வதும் சந்­தேகக் கண்­ணோடு பார்ப்­பதும் சம ­கா­லத்தில் இயல்­பா­கி­விட்­ட­தாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் அலி­ஸாஹிர் மௌலானா கவலை தெரி­வித்தார்.

ஓட்­ட­மா­வடி பிர­தேச செய­லக பிரிவி லிருந்து சமுர்த்தி முத்­திரை பெறு­வ­தற்கு தெரி­வா­ன­வர்­க­ளுக்­கான உரித்துப் பத்­தி­ரங்­களை வழங்கும் நிகழ்வு மீரா­வோடை அமீர் அலி மண்­ட­பத்தில் கடந்த திங்­கட் ­கி­ழமை மாலை இடம்­பெற்றபோது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

மேலும் தெரி­விக்­கையில்,-

“எவ்­வா­றான சவால்கள் வந்­தாலும் எங்­க­ளது சமு­தா­யத்தை எல்லா வகை­யிலும் அவர்­களை வலு­வூட்­டு­வது எங்­க­ளது கட­மை. இப்­போது பொரு­ளா­தார ரீதி­யாக மாத்­தி­ர­மல்ல, பொரு­ளா­தார ரீதி­யாக இருந்­த­வர்­களின் பொருள் எல்­லா­வற்­றுக்கும் எந்­த­வி­த­மாக உத்­த­ர­வா­தமும் இல்லை. உட­மைகள், உயிர்­க­ளுக்கும் உத்­த­ர­வாதம் இல்லை.

நாங்கள் தலைநிமிர்ந்து கௌர­வ­மாக பல இடங்­க­ளுக்கு செல்­கின்ற நேரத்தில், வியா­பா­ரங்­களை மேற்­கொள்ளும்போது, வைத்­தி­ய­சாலை மற்றும் ஏனைய விட­யங்­க­ளுக்கு போகும் நேரத்தில் எங்­களை ஏதோ­வொரு அடிப்­ப­டையில் பேசு­வதும் சந்­தேகக் கண்­ணோடு பார்ப்­ப­து­ம் இயல்பாகிவிட்டது. அண்­மையில் வைத்­தி­ய­சாலை ஒன்றில் பிள்ளை பிறந்­துள்­ளதை பார்ப்­ப­தற்கு அவ­ரு­டைய மாமனார் போகும்போது தாதியர் ஒருவர் கூறினார். 

இன்­னு­மொரு சஹ்ரான் பிறந்­துள்ளான் என்று. இவ்­வாறு சொல்­லு­கின்ற அள­வுக்கு எமது நிலைமை உள்­ளது. இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்­கின்றோம்.

இந்த நிலை­மைகள் மாறும். இதனை சீர் செய்ய வேண்டும், பல சவால்கள் வந்த நேரத்­திலும், பல பொய்­களை கூறி, வைத்­தி­யர்­களைகூட வீணாக பழி சுமத்­திய நிலை­மைகள் எல்லாம் மாறி உண்­மைகள் வெளிக்­கின்­றது. உங்­க­ளது பிர­தி­நி­தி­க­ளாக எங்­கெல்லாம் குரல் கொடுக்க வேண்­டுமோ அந்த கட­மையை நாங்கள் செய்து கொண்­டி­ருக்­கின்றோம். 

நாங்கள் எல்­லோரும் ஒன்று சேர்ந்து பத­வி­க­ளையும் துறந்து மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக வந்­தி­ருக்­கின்­றோமேதவிர அர­சாங்கம் தந்த அமைச்சு பதவிகளை எல்லாம் நாங்கள் துறந்து விட்டு அரசாங்கத்திற்கு இவ்வாறான விடயங்களை செய்தாக வேண்டும் என்ற அடிப்படையில் எங்களது மூச்சாக ஒவ்வொன்றாக நடக்கக் கூடிய நிலைமைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம்” என்றார்.

https://www.virakesari.lk/article/59612

Check Also

அனைத்து பள்ளிவாசல்களின் சொத்து விபரங்களை கோருகிறது அரசாங்கம்

திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துகளின் விபரங்களும் திரட்டப்படும் என்கிறார் பணிப்பாளர் பைஸல் நாட்டிலுள்ள …

You cannot copy content of this page

Free Visitor Counters