நாட்டில், மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான இருவரும் கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவர்கள் இருவரும் கந்தக்காடு  கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து நாட்டில் இன்றையதினம் இதுவரை 07 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள அதே வேளை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது, 654 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 120 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1988 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரி பத்திரிகை

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா