மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும்?

மாடறுப்பு தடை சட்டத்தால் கிராமிய சிங்கள பௌத்தர்களின் நிலை என்னவாகும் என்ற தலைப்பில் ராவய பத்திரிகையில் 02.10.2020 ஆம் திகதி வெளியாகிய ஆக்கம் ஒன்று சுருக்கமான மொழிபெயர்ப்பு.

(முக்கிய விடயம் என கருதப்படும் விடயங்களின் கருத்தை மாத்திரமே தமிழ்படுத்தியுள்ளேன் என்பதனை கவனத்தில் கொள்ளவும்)

இந்தியாவில் மாடறுப்புக்கு நாடுதளுவிய தடை இல்லை. மேலும் இந்தியாவில் மத்திய அரசால் மாடறுப்புக்கான தடை விதிக்கப்படவில்லை.  மாநிலங்களுக்கு ஏற்றவாறு இது தொடர்பில் முடிவெடுக்கும் படி மத்திய அரசு மாநிலங்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

இந்தியாவின் 28 மாநிலங்களில் 20 மாநிலங்கள் மாடறுப்புக்கு நிபந்தனைகளை விதித்துள்ளது (முழுமையான தடையில்லை). கேரளா, கிழக்கு பெங்கால் உட்பட 6 அல்லது 7 மாநிலங்கள் மாடறுப்புக்கு எந்தவித தடையோ நிபந்தனையோ விதிக்கவில்லை. பல மாநிலங்கள் பசுக்களை, வண்டியிழுக்கும் மாடுகளை அறுப்பதனை தடை செய்துள்ளது.  ஆனாலும் இந்த மாநிலங்களில் வயது முதிர்ந்த பயன் குறைந்த மாடுகளை அறுப்பதற்கான அனுமதியினை பெற்று மாடுகளை அறுக்க முடியும்.

2020 மார்ச் முடிவில் குறித்த நிதியாண்டின் இந்தியா 1,152,547 மெட்ரிக்தொன் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதற்கு முந்திய ஆண்டில் 1,236,638 மெட்ரிக்தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவிடமிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்த பிரதான 5 நாடுகள் வியட்நாம் (1,058.68 அமெரிக்க டாலர் மலேசியா 375.92 அமெரிக்க டாலர் எகிப்து 334.06 அமெரிக்க டாலர் இந்துநேசியா 230.39 அமெரிக்க டாலர் ஈராக் 169.67 அமெரிக்க டாலர் இலங்கையில் மாடறுப்பு சட்டம் அமுல்படுத்தப்படவிருப்பது இந்தியாவைப் போன்று நிபந்தனைகள் சலுகைகளுடன் அல்ல.

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?

வயது முதிர்ந்த பயனற்ற மாடுகளைக் கூட அறுக்க அனுமதியற்றவாறே இலங்கையில் மாடறுப்பு சட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது. அதாவது முதுமையடைந்த பயன் குறைந்த மாடுகளுக்கு முதியோர் இல்லத்தை போன்று மாடுகளுக்கும் அமைக்கப்பட்டு அம்மாடுகள் பராமரிக்கப்படும். அதற்கான செலவை யார் பொறுப்பெடுப்பார் அரசா? பொதுமக்களா? என்பது ஒரு பெரிய கேள்வி.

இலங்கையை பொறுத்தவரை 2017 கணக்கெடுப்பபின் படி மொத்த மாடுகளின் எண்ணிக்கை 1.39 மில்லியன் அவற்றில் பால் தரும் மாடுகள் 398,608 பயன் குறைந்த முதுமை அடைந்த மாடுகள் 165,160 மாடறுப்பு தடைசட்டத்தின் பின்னர் பயன்குறைந்த மாடுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் 2 வீதத்தால் அதிகரிக்கும்.

இந்தியாவைப் போன்று இலங்கை கிராமங்களில் மாடுவளர்ப்பவர்கள் ஒரு சிறந்த ஒழுங்கில் திட்டமிட்டு மாடுவளர்ப்பில் ஈடுபடுவாகள் அல்ல. அவ்வாறு வளர்ப்பவர்களுக்கு அரசால் கூட எந்த உதவியோ ஒழுங்கோ செய்துகொடுக்கப்படுவதில்லை. மாடறுப்பு தடைசட்டம் நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரானதாக விதிக்கப்படாவிட்டாலும். மாடறுப்பு எதிர்ப்பு பிரச்சாரம் 3 தசாப்தங்களுக்கு முன்னரே முஸ்லிம்களுக்கு எதிராக வியாபாரிகளால் ஆரம்பிக்கப்பட்டவொன்று.

இதற்கு பிரதான காரணம் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்பதால். மாட்டு வியாபாரம், இறைச்சி வியாபாரம் முஸ்லிம்களின் கைகளில் இருந்தாலும் அவற்றை வளர்த்து பராமரித்தெடுக்கும் தொழிலை செய்பவர்கள் சிங்கள பௌத்த கிராமவாசிகளே.

வடக்கில் வன்னி போன்ற பிரதேசங்களில் மாடுவளர்ப்பில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்துக்களே. முஸ்லிம்கள் பெரும்பாலும் ஆடு வளர்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள். மாடு வளர்ப்பில் ஈடுபடுவர்கள் குறித்த மாட்டின் பயன் தரும் காலம் முடிந்ததும் அதனை வைத்தக் கொண்டு வளர்க்க மிகப் பெருமளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதே போன்று இத்தனை காலமும் தனது வாழ்வாதாரத்துக்கு உதவிய அந்த மாட்டை பராமரிக்காமல் பட்டினியில் போட்டு வதை செய்யவும் விவசாயி விரும்பமாட்டான்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு

கிராம மாடு வளர்ப்பவர்களைப் பொறுத்த வரை அடுத்த மாடுகளிலிருந்து வரும் வருமானத்தில் பெரும் பகுதியை இந்த முதுமையடைந்த பயன் குறைந்த மாட்டைப் பராமரிக்கவே செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மாடு வளர்க்கும் சிங்கள பௌத்த கிராமவாசிகள் மாடுகளை வளர்ப்பது பாலுக்காக மட்டுமல்ல. அவசர பணத்தேவைகளின் போது உடனடியாக பணமாக மாற்றிக்கொள்ளக் கூடியது தான் மாடுகள்.

மாடறுப்பு தடைசட்டம் அமுலுக்கு வந்தால் நீண்ட காலம் சிரமப்பட்டு வளர்த்த மாட்டை வெறுமனே விட்டு வைக்க வேண்டும் அல்லது அந்த மாட்டின் மூலம் ஈட்டிய வருமானத்தை அந்த மாட்டைப் பராமரிக்கவே செலவழிக்க வேண்டிய நிலையே உருவாகும். கிராமத்தில் மாடு வளர்ப்பவர்களுக்கு இந்த சட்டம் இரண்டுகெட்டான் நிலையைத்தான் உருவாக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது

திருமணவீடுகள் போன்றவற்றுக்கு பரவலாக மாடுகள் வாங்குவதுண்டு. ஒரு மாட்டின் விலை பல சந்தர்ப்பங்களில் 1 லட்சத்தையும் தாண்டி விலை போகும். இந்த இடத்தில் தான் சிஙகள பௌத்த கிராமியர்களுக்கு முஸ்லிம் வியாபாரியின் உதவி தேவைப்படுகின்றது.

பெரும்பாலான முஸ்லிம் வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும் வேலையையே செய்கின்றனர். இறுதியாக நடக்கப் போவது மாடறுப்பு சட்த்தால் கடுமையாக பாதிக்கப்படப் போவது கிராமத்து சிங்கள் பௌத்த மாடு வளர்க்கும் விவசாயிகள் தான் முஸ்லிம் வியாபாரிகள் அல்ல. வியாபாரிகள் ஒரு வியாபாரம் இல்லாவிட்டால் இன்னொரு வியாபாரத்துக்கு உடனடியாக மாறிவிடுவார்கள்.  ஆனால் மாடு வளர்ப்பதனையே தொழிலாக கொண்டவர்கள் பயனற்ற முதுமையடைந்த மாடுகளை வளர்த்துப் பராமரிக்க கிராம வியாபாரிகளுக்கு எந்த மாற்றீடும் இல்லை.

Read:  வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு, வாகன இறக்குமதி அனுமதி

முதிர்ந்த பயனற்ற மாடுகள் அதிகரித்துச் செல்லும் போது கிராம மட்டத்திலான குற்றங்களும் அதிகரித்துச் செல்லும். ஒழுங்குபடுத்தப்படாத மாடுவளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் இலங்கை கிராமத்தின் மாடு வளர்ப்பவனுக்கு இந்த சட்டம் இன்னுமொரு சுமையே அன்றி வேறில்லை. இதனால் கிராமங்களில் மாடு வளர்ப்பதனை வாழ்வாதாரமாக செய்து வரும் மாடுவளர்ப்பவர்களுக்கு ஒரு பெரிய அடி தான்.  கிராமங்களில் வறுமை நிலை பெருக இன்னொரு பிரதான காரணமாக இந்த சட்டம் அமையும் என்பது உறுதி.

கட்டுரையாளர் Kusal Perera தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ்