கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய மத்திய மாகாண 9 ரானுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கம்பளை
குண்டசால
பாததும்பர
மெனிக்கின்ன
பம்பரதெனிய
ஹசலக

ஆகிய பகுதிகளை சேர்ந்த ரானுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண வைத்திய பணிப்பாளர் அர்ஜுன திலகரத்ன குறிப்பிட்டார்

கடந்த 2 ம் திகதி முதல் 10 திகதி வரை குறித்த ரானுவ வீரர்கள் விடுமுறையில் வந்துள்ள நிலையில் அவர்கள் அவர்களது சொந்த ஊர்களில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளுக்கு சென்று வந்துள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புபட்ட 300 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்

கண்டி மாவட்ட மக்கள் சுகாதார வழி முறைகளைப் பேணி மிக அவதானத்துடன் இருக்கவும்

CORONA UPDATE:

இலங்கையில் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2651 ஆக அதிகரித்துள்ளது

இரத்தினபுரி – கொரோனா அச்சம் காரணமாக இரத்தினபுரி மாவட்டம் கலவான நகரில் 300 கடைகளை மூட தீர்மானித்ததாக கலவான நகர் வர்த்தக சங்க தலைவர் கூறியுள்ளார்

மொபிடெல் காரியாலயம் – கொரோனா அச்சம் கொழும்பு 2 ல் அமைத்திருக்கும் மொபிடெல் காரியாலயம் மூடப்பட்டது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் படி பணிப்பு

Read:  மீண்டும் ரணில் !!