காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

இம்மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேலும், கடந்த மார்ச் 16 தொடக்கம் ஜூன் 30 வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு 6 மாத மேலதிக சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டும் நாளாந்தம் அதிகளவான மக்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதன் காரணமாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read:  மீண்டும் ரணில் !!
SOURCEஹிரு செய்திகள்