மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஓமானில் இருந்து வந்த 2 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3382 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3233 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்தும் 136 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஇம்முறை புலமைபரிசில்‌ பரீட்சைக்கு புதிய அனுமதி அட்டை அறிமுகம்
Next articleஜனாஸா – மல்வானஹின்னை, பரீதா உம்மா