மனைவிக்கு சொகுசு வாகனம் கொள்வனவு செய்ய, மாணவர்களை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஆசிரியர் கைது.

கொழும்பில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மேலதிக வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் 152 கிராம் மற்றும் கேரளா கஞ்சா 5 கிலோ கிராமினை மோட்டார் சைக்கிளில் கடத்திய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் உட்பட மூன்று பேரும் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். இவர்களில் ஒரு சந்தேக நபர், குறித்த ஆசிரியரிடம் கணித பாடம் கற்கும் மாணவராகும்.

ஆசிரியரின் மனைவிக்கு சொகுசு  வாகனம் ஒன்று கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு மாணவர்களையும் பயன்படுத்தி ஆசிரியர் போதைப்பொருள் கடத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read:  O/L அனுமதி அட்டை கிடைக்காவிட்டால் என்ன செய்வது?