பிரதமர் முன்வைத்த 4 யோசனைகள் – இறைச்சி உண்போருக்கும், வயதான பசுக்களுக்கும் மாற்று வழி

பசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்து அதனை சலுகை விலைக்கு வழங்குவதற்கு அவியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

(28/09) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வதை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, இது தொடர்பில் 4 யோசனைகளை முன்வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த 4 யோசனைகளும் வருமாறு,

பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

பசு இறைச்சியை உட்கொள்ளும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் சலுகை விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்

அத்துடன் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவளை, ஊடக நிறுவன தலைவர்களுடன் அலரி மாளிகையில் (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும், பிரதமர் மஹிந்த ராஜாக்ஷ இதனை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Posted in:

Previous articleஇலங்கையில் 3,000 வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன
Next articleஜனாஸா – அக்குறணை S.M.M. பயிஸ் -ARS-