நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒன்பது பேர் அடையாளம்

நாட்டில் இன்றைய தினம் ஒன்பது புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 3,372 ஆக அதிகரித்துள்ளது.

ஓமானிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த ஆறு பேரும், கடடார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த தலா ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்குள்ளான வெளிநாட்டவர் உட்பட மொத்தம் 20 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 3,230 ஆக பதிவாகியுள்ளது.

தேசிய தொற்று நோயியில் வைத்தியசாலையிலிருந்து 8 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையிலிருந்து 6 பேரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்து நால்வரும், இரனவில வைத்தியசாலையிலிருந்து இருவரும் இவ்வாறு குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு
SOURCEவீரகேசரி பத்திரிகை