கொவிட் 19 நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில் நடைபெறும் பொது மக்கள் தினம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த தீர்மானத்தின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதுடன் இந்த கால எல்லைப்பகுதிக்குள் கல்வி அமைச்சிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்வதற்க அல்லது ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்போர் கல்வி அமைச்சின் உடனடி தொலைபேசி இலக்கமான 1988 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Ada Derana
Akurana Today All Tamil News in One Place