ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது – பாப்பரசர் கவலை

ஹாகியா சோபியாவை மீண்டும் மசூதியாக மாற்ற துருக்கி எடுத்த முடிவு கவலை அளிப்பதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

“கடல் என் சிந்தனையுடன் சிறிது தொலைவில் உள்ளது.  “நான் செயின்ட் சோபியாவைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன், நான் மிகவும் வேதனையடைகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபலமான ஹாகியா சோபியாவை மீண்டும் ஒரு மசூதியாக மாற்றி தொழுகைக்காக திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாகியா சோபியாவை சமய சார்பற்ற அருங்காட்சியமாக மாற்ற 1934 ஆம் ஆண்டு உத்தரவிட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு துருக்கி ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த முடிவு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களிடையே ஆழ்ந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் கதீட்ரலாக இருந்த ஹாகியா சோபியா, ஒட்டோமான் பேரரசால் இஸ்தான்புல் கைப்பற்றப்பட்ட பின்னர் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

ஆனால் கடந்த 86 ஆண்டுகளாக அருங்காட்சியமாக செயல்பட்டு வந்த ஹாகியா சோபியாவிற்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

கிறித்துவ தேவாலயமாக இருந்த இந்த ஹாகியா சோபியா, 1453 ஆம் ஆண்டில் மசூதியாக மாற்றப்பட்டது. 1934 ஆம் ஆண்டில், பல இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் தடைசெய்யப்பட்டு துருக்கியில் மேற்கத்திய கலாசாரம் வந்த பிறகு தேவாலயமாக இருந்து மசூதியாக மாற்றப்பட்ட ஹாகியா சோபியா, சமய சார்பற்ற அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது .

1935 ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் நாளில் இருந்து ஹாகியா சோபியா, அயசோப்யா அருங்காட்சியகம் (Ayasofya Museum) என அழைக்கப்படுகின்றது. 

உலகின் சிறந்த கட்டடங்களுள் ஒன்றாகவும், உலகின் எட்டாவது அதிசயம் என்றும் ஹாகியா சோபியா வர்ணிக்கப்படுகிறது.

ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் கிறித்தவ சமயத்தின் போதனைகளை விளக்கும் எண்ணற்ற கலைப் படைப்புகள் இருந்தன.

அவற்றை முஸ்லிம் ஆட்சியாளர்கள் பெரும்பாலும் அழித்துவிட்டனர், எஞ்சிய கலைப் படைப்புகளின் மீது இஸ்லாமியக் கலை அமைப்புகளை ஏற்படுத்தி முஸ்லீம்களின் தொழுகைக்கான மசூதியாக மாற்றப்பட்டது.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page