ஒக்டோபர் 11 வரை மூடப்படும் குவைத் தூதரகம்!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒக்டோபர் 11 வரை மூடப்பட்டுள்ளதாக, தூதரகம் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்றையதினம் (26) பதிவிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

தூதரகத்தின் மூன்று அதிகாரிகளுக்கும் 44 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒக்டோபர் 11 வரை மூடப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த மூன்று அதிகாரிகளுக்கும் 44 தொழிலாளர்கள் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எந்தவொரு அவசர சேவைகளுக்கும் மின்னஞ்ஞல் ஊடாக slemb.kuwait@mfa.gov.lk இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது. 

Read:  உலமா சபையின் தலைமைப் பதவியைத் தொடர்வாரா ரிஸ்வி முப்தி?
VIAவீரகேசரி பத்திரிகை