தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிப்பு (3 விதமான விலைகள்)

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தேங்காய்க்கான அதி உயர் நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதற்கு அமைய 13 அங்குலத்திற்கு அதிகமான தேங்காய் 70 ரூபாய்க்கும், 12 – 13 அங்குலம் வரையான தேங்காய் 65 ரூபாய்க்கும், 12 அங்குலத்திற்கு குறைவான தேங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter