சில பிளாஸ்டிக் இறக்குமதிகளுக்கு தடை.

சில பிளாஸ்டிக் பொம்மைகள் உள்ளிட்ட வேறு பல பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடைவிதிக்கவுள்ளது.

அதன்படி ஊதப்பட்ட பலூன்களை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படும் என்று மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை கூறியுள்ளது.

பிளாஸ்டிக் பந்துகள், சிறிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளை இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என்றும் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

Read:  உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி