பூஜாபிட்டிய பிரதேச சபை விலைமனுக் கோரல் – CCTV கெமரா அமைக்க.

பூஜாபிட்டிய பிரதேச சபை விலைமனுக் கோரல் – பாதுகாப்பு கெமரா அமைப்பை ஸ்தாபித்தல் (CCTV Camera)

இப்பிரதேச சபைக்கு கீழ்க்காணும் வேலையை நிறைவேற்றிக் கொள்வதற்கு விலைமனுக்களைக் கோருவதற்காக பிரதேச சபை பெறுகைக்குழு தீர்மானித்து உள்ளமையினால் அதற்காக தகைமையான நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களிடமிருந்து விலைமனுக்களை சமா்ப்பிப்பதற்கு இத்தால் அழைப்பு விடுக்கப்படுகிறது.

மேற்படி வேலைக்காக விலைமனுக்களைச் சமா்ப்பிப்பதற்கு நிபந்தனையுடனான மாதிhpகள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை 2020.09.28 முதல் 2020.10.28 வரை வாரத்தின் வேலை நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 3.00 வரை ரூ. 500.00 தொகையை இப்பிரதேச சபைக்கு செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

விலைமனுக்களுடன் விண்ணப்பப் படிவத்தை பொறியிட்டு 2020.10.29 மு.ப. 10.30 இற்கு முன் கிடைக்குமாறு தலைவா், பூஜாபிட்டிய பிரதேச சபைக்கு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.

2020.10.29 மு.ப. 10.30 இற்கு சகல கேள்விகளும் திறக்கப்படுவதுடன், அதற்காக கேள்விதாரா் அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவருக்கு சமுகமளிக்க முடிவதுடன், இக்கேள்வி பற்றிய இறுதித் தீர்மானம் எடுத்தல் பூஜாபிட்டிய பிரதேச சபையின் பெறுகைக்குழுவிற்கு உரியது.

(இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 0812302682)

திகதி: 2020.09.22
அநுர பொ்னாண்டோ – தலைவா், பூஜாபிட்டிய பிரதேச சபை, பூஜாபிட்டிய

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

Free Visitor Counters