இரண்டாவது நிலை வாகனங்களின் விலைகளில் உயர்வு

வாகனங்களை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நிலை வாகனச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலையுயர்வை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என்று போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடுவெல பகுதியில் நேற்று வாகன விற்பனையகம் ஒன்றுக்கு சென்றிருந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,

இலங்கையின் சந்தையில் உள்ள இரண்டாம் நிலை வாகனங்களின் விலை பாரியளவில் தற்போது உயர்ந்துள்ளது.

எனவே தற்போதைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். இந்த தற்காலிக தடை நிரந்தரமானது அல்ல.

பணப்புழக்கத்தை உறுதிப்படுத்த இது விதிக்கப்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தடைகள் தளர்த்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அமுனுகம கூறியுள்ளார்.

Check Also

ஹிஸ்புல்லாஹ்வின் மீள்இணைவு கட்சியை வலுப்படுத்தும் – ஹக்கீம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் …

Free Visitor Counters Flag Counter