புனித உம்ரா சம்பந்தமாக சவுதி அரேபிய அரசின் அறிவிப்பு (முழு விபரம்)

தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சில குறிப்பிட்ட ஏற்பாடுகளுடன் புனித உம்ரா யாத்திரை மேற்கொள்ளவும், வருகை தரவும் சவுதி அரேபிய அரசு ஒப்புதல் அளித்தது.

முதல் கட்டம்: புனித மக்கா மசூதியின் சுகாதார முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பேணும் விதத்தில் அதன் மொத்த கொள்திறனில் 30% (ஒரு நாளைக்கு 6,000 யாத்ரீகர்கள்) என்ற விகிதத்தில் 2020 அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் இராஜ்ஜியத்தில் வசிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு உம்ரா செய்ய அனுமதி.

2 வது கட்டம்: 2020 அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை முதல் 75% (ஒரு நாளைக்கு 15,000 யாத்ரீகர்கள், ஒரு நாளைக்கு 40,000 வழிபாட்டாளர்கள்) என்ற விகிதத்தில் சவுதி அரேபியாவிலிருக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை உம்ரா செய்யவும், தொழுகைகளுக்கும் அனுமதித்தல். புனித மசூதிகளின் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் படி, மஸ்ஜிதுன் நபவி மசூதியில் நடத்தப்படும் மழலையர் கற்பித்தல் பள்ளிகளிலும் 75% வருகைக்கு அனுமதி.

3 வது கட்டம்: 2020 நவம்பர் 1, ஞாயிற்றுக்கிழமை முதல், கொரோனா தொற்றுநோயின் முடிவு அல்லது ஆபத்து காணாமல் போவது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரை, ராஜ்ஜியத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வசிக்கும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு மட்டும் புனித உம்ரா செய்ய அனுமதித்தல், கிராண்ட் மசூதியின் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் படி, 100% (ஒரு நாளைக்கு 20,000 யாத்ரீகர்கள், ஒரு நாளைக்கு 60,000 வழிபாட்டாளர்கள்) யாத்ரீகர்களை அனுமதித்தல். வெளி நாடுகளிலிருந்து வரும் யாத்ரீகர்களை பொறுத்தவரை, கொரானா தொற்று இல்லாததாக சுகாதார அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படும் நாடுகளிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி. 

4 வது கட்டம்: கொரானா வைரஸ் தொற்று உலகளவில் நீங்கிவிட்டதாக உரிய அதிகாரங்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர், இராஜ்ஜியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு புனித மசூதிகளில் 100% உம்ரா செய்ய அனுமதித்தல்.

சுகாதார அமைச்சகம் மற்றும் தகுதி வாய்ந்த அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார தரங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் நோக்கத்துடன், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் தொடங்கப்படும் அப்ளிகேஷன் (உம்ராஹ்னா) மூலம் யாத்ரீகர்கள், வழிபாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நுழைவு கட்டுப்படுத்தப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும், சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் தேவைகளைப் பின்பற்றவும், மாஸ்க்குகளை அணியவும், பாதுகாப்பான சமூக இடைவெளியை பேணவும், புனித யாத்ரீகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொற்றுநோய்களின் அச்சுறுத்தல்களிலிருந்து மனித பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மனிதனைப் பாதுகாப்பதில் இஸ்லாமிய சட்டத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்கும், தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான முறையில் அமல்களை நிறைவேற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day