பெற்ற பிள்ளைகளுக்கு எமனாக மாறிய தாய் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

வேயங்கொட – குடல்ஒலுவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றில் வாய்கால் ஒன்றில் கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் ஒன்றரை வயது மற்றும் 9 வயது பிள்ளைகள் இருவரும் அவர்களுடைய தாயும் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த தாயே முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவருக்கு நித்திரை ஏற்பட்டதான காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஸ்ரீ.மு.கா. எனும் பேரியக்கத்தை எந்தப் பூச்சியாலும் அழிக்க முடியாது ; றவூப் ஹக்கீம்
Next articleஅக்குரணை பிரதேச செயலாளர் அக்குரணை மக்களுக்கு விடுக்கும் முக்கிய செய்தி