தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

வென்னப்புவ பிரதேச சபையினால் நடத்தப்படும் தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான நேற்று வெளியிடப்பட்ட கடிதம் ஒன்று,  வென்னப்புவ பிரதேச சபைத்  தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,  குறித்த கடிதத்தில் பிரதேச சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத்  தாக்குதல்களையடுத்து,  குறித்த பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப்  பகுதிக்கு வருவதற்கு,  ஏனைய மக்களும் வியாபார சமூகமும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், பிரதேச சபைத் தலைவர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன்பிரகாரம், தங்கொட்டுவ  வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள்  வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/59037

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page