60 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை வேலைத் திட்டம் ஆரம்பம்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கு 60 ரூபா நிவாரண விலையில் தேங்காயை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தெங்குச் செய்கை சபை இணைந்து இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் லொறி மூலம் தேங்காய் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று (22) ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் ஒன்றை 60 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள முடியும். தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Read:  மீண்டும் ரணில் !!