சௌதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அலுவலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் அதிகாரிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுதப்பட்டுள்துடன் அவர்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜித்தா நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் இருந்து இலங்கை வந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleகொரோனா பரவ காரணம், தப்லீக் ஜமாத். இந்திய உள்துறை அமைச்சு எழுத்து மூலம் அறிக்கை
Next articleகொரோனா இரண்டாம் அலைக்கு எதிராக புதிய அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து