கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

கண்டி மாவட்டத்தில் உள்ள மெனிகின்னா வைத்தியசாலையின் தலைமை வைத்தியஅதிகாரி மீது பிராந்திய அரசியல்வாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதாதாக கூறியே இந்த பணிப்பகிஷ்கரிப்பினை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

Read:  கோட்டா, மஹிந்த இருவரும் பதவி விலகியதற்கான காரணத்தைக் கூறும் நாமல் ராஜபக்‌ஷ!
VIAவீரகேசரி பத்திரிகை