பொதுத்தேர்தலில் ரவூப் ஹக்கீம் கண்டிக்கு இனவாதத்தை கொண்டு வந்தார் – லக்ஸ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு

இலங்கை முஸ்லீம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் கடந்த பொதுத் தேர்தலின் போது கண்டி
மாவட்டத்தில் இனவாத அரசியலில் ஈடுபட்டதாக லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டி உள்ளார்.

சிறுபான்மை வேட்பாளர்களான ஹலீம் மற்றும் வேலுகுமார் ஆகியோருடன் ரவூப் ஹக்கீம் பிரச்சாரம் செய்ததாக  கிரியெல்ல சுட்டிக்காட்டி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சமகி ஜன பலவேகய  வென்ற 4 இடங்களில், அவர்கள் மூன்று பேரும் முதல் மூன்று இடங்களை வென்றனர் என்று  கிரியேல்ல கூறினார்.

2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் சஜித் பிரேமதாசா பெற்ற மொத்த வாக்குகளில், இந்த பொதுத் தேர்தலில் ஒரு இலட்சத்து எண்பத்து மூவாயிரம் வாக்குகள் பதிவாகவில்லை, அவற்றில் பெரும்பாலானவை சிங்கள வாக்குகளாகும்.

2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடும்போது, ​​இந்த பொதுத் தேர்தலில் மக்கள் முன்னணி சுமார் 5,000 வாக்குகளை இழந்துள்ளது என்று  கிரியெல்ல கூறினார்.

ஆசிய மிரருக்கு அளித்த பேட்டியில் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

Read:  ஜும்மா தொழும் இடங்களில் மாற்றம் - ஜம்இய்துல் உலமா