சிறுவர்களுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் உறவு : 18 வயது பெண் கைது 

சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்குட்படுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உடலுறவில் ஈடுபட வைத்த பெண்ணொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை புதிய பாதெனிய பகுதியைச் சேர்ந்த 18 வயதான திருமணமான பெண்ணொருவர் இவ்வாறு ஈடுபட்டுள்ளதுடன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவகலுக்கமைய சந்தேகத்திற்கிடமான வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது. 

இதன்போது 820 கிராம்  ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 17 வயது சிறுவனொருவருடன் தகாத உறவு நடத்திய நிலையில் குறித்த பெண் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘ சுச்சி ‘ என அழைக்கப்படும் செல்லதுறை சுலோச்சனா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறைந்த வயதுடைய சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளார். 

அது மாத்திரமின்றி அவர்களுடன் பாலியல் ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட வைத்துள்ளதுடன் அவர் ஏற்கனவே  இரு முறை திருமணமாகி விவாகரத்தானவர் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தம்புள்ளை பாதெனிய பகுதியிலுள்ள பல பெண்கள்  நேற்றைய தினம் காலை தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த பெண்ணிற்கு எதிராக முறைப்பாடுகளை அளித்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

SOURCEவீரகேசரி பத்திரிகை