ஐ.தே.க புதிய முகங்களுக்கு இடமளித்துள்ளது

நாட்டின் எதிர்காலத்திற்காக புதிய முகங்களுக்கு இடமளிக்க தான் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்ததாக அக்கட்சியின் தலைவர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

காலி பலபிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.. அரசாங்கம் ஒன்றிடம் நாம் எதனை எதிர்ப்பார்க்கின்றோம். வாழ்வதற்கு, கையில் பணமுடன் வாழ்வதற்கு. இதன் காரணமாகதான் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க களமிறங்கியுள்ளது.

அதன் காரணமாகதான் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

Read:  மீண்டும் ரணில் !!