பிரான்ஸில் இருந்து வந்த 2 கோடி ரூபாய் பெறுமதியான பரிசு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன் பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´ என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான விமான அஞ்சல் பொதியில் இந்த போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

அந்த அஞ்சல் பொதியில் சூட்சுமான முறையில் பொலிதீன் பைகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட 5716 மெத்தாம்பேட்டமைன் மாத்திரைகளே இவ்வாறு கைப்பற்றப்பற்றுள்ளன.

அந்த அஞ்சல் பொதி கொழும்பு புதுக்கடை பகுதியில் வசிக்கும் 35 வயதான ஒருவருக்கு பரிசாக பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்,

இந்த சம்பவம் குறித்து சுங்க போதைப்பொருள் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page